இந்திய பொலிஸாரின் செயலால் வெட்கப்படுகிறோம்- இலங்கை சூழலியலாளர்கள்
இந்திய தமிழ் நாட்டு பொலிஸார் தூத்துக்குடி சூழலியல் செயற்பாட்டாளர்கள் 13 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். செம்பு உருக்குக் கம்பனியொன்றுக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இவ்வாறு மனிதாபிமானமற்ற நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சூழலியலாளர்கள், குறித்த கம்பனியின் செயற்பாடு பாரிய சூழல் மாசுபடுத்தலை ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கமும் பொலிஸாரும் கம்பனியின் மீதே சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக, சூழலியலாளர்கள் அல்லது பொதுமக்களை சுட்டிக் கொலை செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இந்திய அரசாங்கம் பொலிஸாரின் முறையற்ற செயல் மற்றும் […]